Tuesday, 12 November 2013

தங்க நாற்கர சாலையும் ராமாஸ் கபேயும்


தங்க நாற்கர சாலையும் ராமாஸ் கபேயும்



நவம்பர் 1, 2013, வெள்ளிகிழமை, கர்நாடகத்தில் கட்டாய விடுமுறை. திங்கள் 4 ம் தேதி பலி பாதமி, மீண்டும் விடுமுறை. மகளுக்கும் கல்லூரி விடுமுறை. மனைவிக்கு ஜேர்மன் வகுப்புக்கள் எடுக்க விருப்பம்தான் , ஆனால், மாணவர்கள்  வர மறுத்துவிட்டார்கள். இந்த 4 நாட்களை "நல்ல " முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற உந்தலினால் ஏற்காடு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஏற்காடு செல்லுவது என்பது இனிமையான அனுபவம். இரண்டு காரணங்கள் . ஒன்று- வேகமான பயணத்துக்கு ஏற்ற  தங்க நாற்கர சாலை மற்றும் தர்மபுரியில் உள்ள  அறுசுவை உணவுக்கு பேர் போன ராமாஸ் கபே!!!

கடந்த 15 வருடங்களில் நாம் இந்தியாவில் பெருமை கொள்ளகூடிய விஷயங்கள் பல. கைபேசி, தொலைக்காட்சி ( ஒரே அலைவரிசையில் மாலை 7 மணிக்கு வயலும் வாழ்வும் பார்த்த ஞாபகம் இருக்கிறதா ? :) ) மற்றும் தங்க நாற்கர சாலை( Golden Quadrilateral)  . முந்தைய பிரதமர் திரு வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தினால் நமது வாழ்க்கையில் ஒரு புதிய அத்யாயம் ஏற்பட்டுள்ளது. அதி வேகமாக செல்ல கூடிய நவீன உந்து வண்டிகள் நம்மூரிலே இப்பொழுது உற்பத்தி செய்ய படுகின்றன. விடுமுறை என்றால் பேருந்து அல்லது ரயில் போன்ற்வைகளைதான் நம்பியிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

இப்பொழுது நாம் ராமாஸ் கபே பற்றி பேசுவோம். தர்மபுரியில் ஊருக்கு நடுநாயகமாக மெயின் சாலையில் இது அமைந்துள்ளது. தங்க நாற்கர சாலை வந்த பிறகு இங்கு பலரும் வருவதில்லை. அந்த சாலையில் அமைந்துள்ள பல புதிய உணவகங்களுக்கு சென்று விடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புநான் என் நண்பர் விசயரதினத்தை அங்கு அழைத்து சென்றிருந்தேன் . முதலில் ஒரு வித தயக்கத்துடன் நுழைந்த அவர், ஒரு இட்லிக்கு பிறகு , கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டு அங்கு உள்ள பல பதார்த்தங்களை  ஒரு  "கை " பார்த்தார். இவரை போன்று பலருக்கு இந்த விடுதியயை அறிமுகம் செய்திருக்கிறேன். என் மகளும் , மனைவியும் பட்டினி கிடந்தால் கிடப்பார்களே ஒழிய , தர்மபுரியை தாண்டும் பொழுது இங்கு உணவு அருந்தாமல் செல்ல ஒப்பு கொள்ள மாட்டார்கள். அந்த உணவின் மகிமை அப்படி.

உங்களின் கேட்காத கேள்வி எனக்கு புரிகின்றது. முட்டுக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பதிர்கேற்ப தங்க நாற்கர சாலைக்கும் ராமாஸ் café க்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் வினவலாம்.

இந்தியாவில் இரண்டு ஊர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. பக்கத்து ஊர்களாக இருந்தாலும் சில பல வித்தியாசங்களை காணலாம். பழக்க வழக்கங்கிளில் மாறு படலாம். முக்கியமாக உணவு..... அமெரிக்காவில் எங்கு சென்றாலும் பர்கர் ஒரே மாதிரி சுவைக்கும் (பர்கருக்கு எப்படி சுவை இருக்கு முடியும் என்று கேட்காதீர்கள்) என்று அவர்கள் பெருமை பட்டு கொள்வார்கள். இங்கு அவ்வாறு உள்ள அவலம் இல்லை. திருநெல்வேலி இருட்டு கடை அல்வா , கோயில்பட்டியில் கிடைக்காது. தார்வாடில் கிடைக்கும் பேடா, பெல்காமில் கிடைக்காது- அங்கு குந்தா தான் கிடைக்கும். இவ்வாறு பல பல உதாரணங்கள்.

தங்க.... சாலை வருவதிற்கு முன்பு நாம் ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊருக்கு விசேஷமான பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தோம். கேரளா என்றால்  பனானா சிப்ஸ். அதுவும் சில குறிப்பிட்ட கடைகளுக்கு தேடி கண்டுபிடித்து சென்று வாங்கியிருக்கிறோம். கொச்சி மலபார் சிப்ஸில் கிடைப்பது போன்று வேறு எங்கும் கிடைக்காது.

  இன்று நிலைமை மாறி விட்டது. தங்க...... சாலை ஊருக்குள் செல்வது இல்லை. வேகமாக செல்லும் நமக்கு ஊர் என்பது ஒரு மைல்கல்தான். நாம் அதை எட்டிப்பார்ப்பது கூட இல்லை. இந்தியாவை போன்ற கலாசார மாறுபாடுகள் கொண்ட நம் நாட்டில் நாம் எதையோ இழக்கின்றோமோ என்ற ஆதங்கம்தான் கண் முன்னே நிழலாடுகின்றது. சரவணா பவன் போன்று " பாஸ்ட் பூட்" பெருகி விட்ட இக்காலம்களில் , 50 வருடமாக உணவை தனித்தன்மையுடன் வழங்கி வரும் ராமாஸ் கபேக்கு ஏது வாய்ப்பு ? கம்பியில்லா தந்தியை போல, வீட்டில் அமைந்துள்ள தொலை பேசியை போல ராமாஸ் கபேயும் கால சுவட்டிலிருந்து மறைய வேண்டியதுதானா ? இருட்டு கடை அல்வா மறைந்து எங்கும் ஒரே போல உள்ள "cடொனல்ட்' அகர்வால் அல்வா மட்டும்தான் நம் குழந்தைகளுக்கு இனி கிட்டுமா ?

இதை போன்று ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு கடை தெருக்கள் உண்டு. கோவையில் ஒப்பணகார வீதி, திருவனந்தபுரத்தில் சாலை பஜார், நம் பெங்களூரில் கம்மேர்சியல் தெரு போன்றவை. ஒவ்வொரு கடை தெருவிற்கும் ஒரு தனி தன்மை உண்டு இன்று நம் குழந்தைகள் "பல அங்காடி கட்டிடத்தை ( MALL ) விரும்புகிறார்கள். சென்னையில் உள்ள FORUM Mallkkum பெங்களூருவில் உள்ள ஒன்றுக்கும் ஏதாவது  வித்யாசம் இருக்கிறதா  , கூறுங்கள் பார்ப்போம் ? மயிலை கற்பகாம்பாள் மெஸ் பெங்களூரில் இல்லை, பகத்ராம் ஸ்வீட்ஸ் சென்னையில் இல்லை. ஆனால் SUBWAY , KFC ஆகியவை இரண்டு FORUM  MALL களிலும் உள்ளன. ஒரே போன்று.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை படித்ததாக ஞாபகம். இந்த புதிய சாலைகள் பல கிராமங்களை இரண்டாக பிரித்து குறுக்கே செல்லுகின்றன. சாலையை கடக்க முடியாத காரணங்களினால் ஒரு குடும்பமாக இருந்த கிராமம் இரண்டாக பிரிந்துள்ளது. " ரோட்டிற்கு  இந்த பக்கம் , அந்த பக்கம்  என்று ஊர் சனங்கள் பேசி கொள்வது, வேறுபாடு கொள்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது

இந்த மாறுதல்களை காலத்தின் கட்டாயம் என்று பொருள்கொண்டு மென்மேலும் செல்வதா அல்லது தலைமுறை இடைவெளியால் ஏற்படுகின்ற ஒரு பிரிவினையின் தாக்கமா? மாறுதல்களை ஏற்று கொண்டு ஆகத்தான் வேண்டுமா ?

எனக்கு  தெரியவில்லை! உங்களுக்கு ?

 

Wednesday, 9 October 2013

Kadal- en ennangal.


கடல்

 

நான் சில நாட்களுக்கு முன்புதான் BLOG எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது என் மனதில் , என்னையும் அறியாமல் குடி கொண்டிருக்கும் ஒரு அவா என் கண் முன் வந்தது. அதுதான் கடலின் மீது நான் கொண்டுள்ள ஒரு ஈர்ப்பு. நான் பிறந்தது ஒரு கடற்கரை பட்டினத்தில்தான், பள்ளியில் படித்த 4 இறுதியாண்டுகள் எங்கள் வீடு தூத்துக்குடி கடற்கரையை நோக்கிதான் அமைந்து இருந்தது.

 

ஏனோ தெரியவில்லை, கடலின் மீது ஒரு பாசப்பினைப்பு உருவாகி விட்டது. பாசமென்றால் கடலில் இறங்கி நீந்துவது அல்லது கடற்பயணம் செய்வது அல்லது கடல் உயிரனங்களை உண்பது என்பதை போன்ற செயல்கள் அல்ல. சரியாக சொல்லபோனால் இவை போன்ற நடவடிக்கைகளில் எனக்கு அறவே விருப்பம் இல்லை. வருடந்தோறும் குடும்ப பயணம் மேற்கொண்டு கடலை பார்க்கும் பொழுது ஒரு இனம் தெரியாத பயம். என் அன்பு மகளுக்கு எப்பொழுதும் ஒரு நிராசை உண்டு. மற்றவர்களை போல ஆர்ப்பரிக்கும் அலைகளில் நனைவது என்பது அவளுக்கு பிடித்த ஒன்று. தனியாக கடலில் நிற்க அவளுக்கு தைரியம் கிடையாது. என் மனைவிக்கோ அது அவளுடைய 'மூட் "   பொருத்தது. எனக்கு அலைகளில் நிற்பது அவ்வளவாக பிடிக்காது. மகள் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். ஒரு தொலைவில் மணலில் அமர்ந்து அலைகளை கண்டு அதியசித்து மகிழ்வதுதான் எனக்கு பிடிக்கும்.

கடலில் அப்படி என்ன மோகம் ? கடலை கண்டால் அப்படி என்ன பயம்?

கடல் தாய் அழகானவள். தாயின் பரந்த மனப்பான்மை கொண்டவள்.  பெண்ணுக்குரிய நளினத்துடன் நாள்தோறும் மணிக்கு ஒன்று என்று என்று வண்ண வண்ண ஆடைகள் மாற்றி  மகிழ்பவள். நாணத்துடன் அவள் சந்திரனையும் சூரியனையும் எதிர்கொள்வது தான் எத்தனை கொள்ளை அழகு? மாதம் ஒரு நாள் சந்திரன் வரவில்லை என்றால் அவள் கொள்ளும் கோபம் தான் என்ன? அதனால் அவளின் ஆர்ப்பரிக்கும்  தாண்டவம்  கண் கொள்ளா காட்சி !பகலவன் உதிக்கும் பொழுது அவள் அணியும் தங்க நிற ஆடையின் அழகுதான் என்ன , அவன் விடை பெற்று சந்திரனை வரவேற்கும் அவளின் மேல் படர்ந்திருக்கும் அந்த மாலை ரேகைகளுக்குதான் என்ன ஒரு மாறுபாடு ? புயலேன்றால் தானும் வெறியாட்டம் ஆடி மகிழ்வாள் அதன் பின்பு இவல்லஅல்லவோ பச்சை குழந்தை என்று அமைதி காப்பாள்.

 

என்னுடைய நோக்கில் நான் கடல் தாயை ஒரு வித்தியாச கோணத்தில் காண்கின்றேன். ஆறுகள் ஓடி விடுகின்றன. ஓடிய வெள்ளத்தை நாம் திரும்பவும் காணபோவதில்லை. காலத்தை போன்றது . ஆறுகள் நமக்கு கூறும் செய்தி 'யாக்கையின்  நிலையாமை".மலைகள் பேசுவது இல்லை, ஓடி போவதும் இல்லை. அவை நமக்கு  உணர்த்தும் செய்தி " இயற்கையின் நித்யதன்மை ". கடல் முக்காலத்திற்கும் பொது. நான் படித்த கால்டுவெல் பள்ளியின் சரித்திர மற்றும் பூகோள ஆசிரியர் ஆசான் மார்டின்  அவர்கள் சொன்ன வார்த்தைகள் என்காதுகளில் ரீங்காரமிடுகின்றன. “இன்று நாம் காணும் இந்த கடல் அலைகள் உங்கள் முப்பாட்டன் கால்களை, உங்கள் தாய் தந்தையாரின் கால்களை தழுவியிருக்கிறது  . இன்று நீங்கள் அந்த அலைகளை கண்டு மகிழ்கிறீர்கள். நீங்கள் காணும் இதே அலைகள் உங்கள்  வருங்கால  சந்ததியிரின் கால்களை பரவும்

வாழையடி வாழையாக வளரும் மாந்தர்களுக்கு  கடல் என்பது ஒரு தொடர்கதை. ஆற்றை  போல் அவள் மறைந்து விடுபவள் அல்ல. மலையை போன்று அவள் பெசாமடந்தயையும் அல்ல. எனக்கு கண் விருந்து அளித்தவள், என் மகளின் அன்புக்கு பாத்திரமானவள், என் தாயை ஈர்த்தவள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் . பல ஆண்டுகளுக்கு பிறகு என் தலைமுறையில் வந்தவர்களும்      அவ்வாறு கூறி கொள்வார்கள். என்னே அவளது என்றும் மாறா இளமை ! அன்பின் துடிப்பு, அதை வெளிக்கொணரும் மீண்டும் மீண்டும் பொங்குகின்ற அவ்வலைகள் ?

 

தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் காலத்தால் அழியாத அலைகளுக்கு முன்பு நான் ஒரு சிறு துகள். அலைகளை சிறு வயதில் இன்பத்துடன் பார்த்த கண்கள் , கால  சக்ரத்தின் சுழலில் இந்த உடம்பின் நிலயற்ற தன்மையை நினைத்து இன்று ஒரு இனம் தெரியாத பயத்துடன் நோக்குகிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் தயாராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

 

ஆனால் , கடல் தாய் என்றும் இளமையானவள் . என் தாயை ஆட்கொண்டவள் , என் மகளை சுண்டி இழுப்பவள். இதுவே என்னை அவளை நோக்கி என்றும் இழுக்கின்றது. அதுவே  என் மோகம். என் வாழ்க்கையின் கடந்த சுவடுகளை நினைவூட்டுகின்றது. எதிர் காலத்தின் கேள்விகளை எழுப்புகின்றது,  அதுவே என் இனம் தெரியாத பயம்.

 

தாயே, காலம் முடியுமட்டும் நான் மீண்டும் மீண்டும் உன்னை காண வருவேன். உன்னை அரவணைக்க, கட்டி அணைத்து அன்பு முத்தமிட , என் எண்ணங்களை எங்கெங்கோ எடுத்து செல்ல ! 

தாயே, இளமையானவள் நீ, அழகானவள் நீ , அன்பு காட்டுபவள் நீ, ஆக்ரோஷமும் நீயே.

வணங்குகிறேன்.

Sunday, 6 October 2013

North Kerala- Malabar-Thalaserry.






North Kerala- Malabar. 



Drive down Muzhapilangadu beach.




Kerala is a very small state and it is in the Global Map as a destination that one should not miss in his/her lifetime. I hail from Kerala and that too from south Kerala. Today the tourists come mostly to South Kerala with Kumarakom as a huge magnet attracting people from far and wide with their kettu vellams, houseboats etc. These guys have transformed my hometown Alleppey into another Venice. We as kids, spending the summer holidays at Alleppey saw only the mosquitoes and the “elephantiasis” an affliction that bloated the legs of the human beings. This disease caused by the mosquitoes created an egalitarian society and never distinguished between the high and low .  Sreedharan, who came to our house to clear wild growing grass and my Grandfather, number 1 lawyer in that town,  both were the “beneficiaries” of this curse.

At the confluence of the twin rivers and the Sea.
Interesting, that many of the tourists are blissfully unaware of less crowded and unspoilt beauty of North Kerala or “Malabar”. In my memory, I can recall only one person, a non Keralite, who has fallen head over heels in love with Wyanad, part of Malabar. He is Dr Lloyd who has made it a habit to go there, only there, year after year for his vacations. Well, that’s a different story, which will be told at an appropriate time.


In my blog, I plan to cover some lesser-known jewels of Malabar where I had the fortune of visiting by road along with my family.

A few points about Malabar.

1.     Not as crowded as South Kerala.
2.     Beaches are Spartan .
3.     Fairly good roads.
4.     Get used to the big fat and red rice of Kerala. It is tasty and healthy. We seem to be proud in adjusting to “Chinese- Chinese” food when we go east. Why not the ‘puzhungal ari ( boiled rice)“ from God’s own country?
5.     Vegetarians will have challenges. Grab Parippu vada  ( vada made out of Bengal gram), Pazhampori (  Kerala banana dipped in batter and shallow fried ) and Kattanchaya( black tea) whenever u see them. Pls do remember that these are available in ordinary teashops only. Other option, for lunch atleast, is to go to a temple and have food at “Ootuparai”(food served for general public).
6.     Ofcourse, Kerala temples will have their strict dress regulations, which need to be followed in the ootuparai also.
7.     Pathiri is another food item veggies can try. The problem will be the  accompaniments since they will be mostly non veg only.

Thalaserry:

Kerala is essentially known by its 2 cities. Thiruvananthapuram  and Kochi. To a lesser extent Kozhikode  ( Calicut- thanks to Vasco) and Palghat  in North. Thalaserry is north of  Kozhikode right on the coast, just next to Mahe, part of Puduchery State. The Anglicized name for the town is Tellicherry . 

 I am sure that many of you don’t know some of the unique features of this beautiful little town.

1.     Known as City of 3 Cs. Circus, Cake and Cricket.
2.     Cricket, in India, was first played at Thalaserry. It was Sir Arthur Wellesley (he was an ordinary Colonel at that time) who introduced that this town. This was in the year 1790 and Kolkata saw the first willow only in 1860 only. First Cricket club in India was formed in this town.
3.     The youngest player to appear in a match at Lords , Sir Colin Cowdrey who played  when he was 13 ( poor Tendulkar- he missed that record and cannot aspire for it now  J) played his early cricket at this town. Colin Cowdrey subsequently became a legend of world cricket. His father was a tea planter at this town and laid the first cricket pitch.
4.     One of the first bakeries of India was established in this town.
5.     The  town is 54 kms north of Kaapad beach where Vasco-da-Gama landed.
6.     This town is the birthplace of Indian Circus. Centre from where Theyyam and Kalari Payattu spread across Kerala.
7.     One of the earliest printing presses in India was established here.
8.     It has the only beach in India – 4 kms long- where you can drive a car on the beach without getting stuck.
9.     The first NTTF was established here.

.


Points to be noted when you are at this town.

1.     Mahe is a couple of kms away from Thalaserry and is an union territory administered by Pondicherry. Petrol is cheaper by Rs 4 per litre.  Obviously liquor also. Mahe is a small town and every alternate shop is either a petrol bunk or a liquor vend. J
2.     Thalaserry is well connected by roads and train. From Bangalore the best route will be via Mysore, Sultan battery and Vaithri. Don't get into Mysore and take the bypass to Nanjangudu and Gundulpet. If you have the time, pls visit the beautiful Shiva temple at Nanjangudu, really worth a visit for its sculptures and the famous "sultan lingam". From Gundulpet , for the next 40 kms or so, it is via beautiful forests. If u r lucky u can see some wild animals also. Just before Sultan battery pls stop and have a look at the giant bamboos . 
  During my vist, I stayed with a relative of mine and hence not in a position to comment on hotels.
3.     Like many other Kerala towns, Thalaserry has a few vegetarian restaurants only and the food that is available may not appeal to the palate of a non-Keralite. But can be managed without much of an issue.
4.     Don’t miss to drive on the Muzhapilangadu beach. You cannot get it anywhere else in India.
Afternoon view at the Confluence.
5.     It is a great sight from Overbury’s folly, a seaside promenade. A must visit. French, British and Dutch plus several Indian Kings ruled Thalaserry. A slow drive around the city will give you ample evidence of the cultural “pot-poure”.
6.     Please go to the confluence of Anjanakandi and Thalaserry rivers as they meet the sea. It is a visual treat especially when there is high tide in the sea.
7.     I don’t have too many photos to share except that of Muzhapilangad beach. I was using my Honda City during this trip.
8.     Pls go around the cricket stadium. It is as venerable as Lords Cricket Ground.
9.     Apart from cakes, please do not miss out Cashew Macroons. They are delicious.